தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு

தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு SKOCH Order of Merit, SKOCH-Gold ஆகிய இரண்டு விருதுகள் (SKOCH விருது) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

2020 ஆம் ஆண்டு SKOCH அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட போட்டியில் தமிழகத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கலந்துகொண்டு, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகளின் புகைப்பட ஆதாரங்கள் மற்றும் இதுவரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பரப்புரை பணிகள் ஆகிய விபரங்களுடன் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்றல் (Elimination of Open Defecation) என்ற தலைப்பில் 06.02.2020 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற Evaluation presentation நிகழ்ச்சியில் powerpoint presentation மூலம் விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பல்வேறு பணிகள் மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொண்டதால் தூத்துக்குடி மாவட்டம் Semi- finalist ஆக Order of Merit விருதிற்கு தேர்வு செய்யப்பட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் தூய்மை பாரத இயக்கம் குறித்த ஆவணம் தொகுப்பு SKOCH இணையதளத்தில் E-Exhibition ஆக பொதுமக்களின் பார்வையிட்டு மதிப்பீடு செய்து வாக்கு அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் அதிக வாக்குகள் பெற்று (Elimination of Open Defecation) முதல் இடத்தை பிடித்துள்ளது

பின்னர் E-SKOCH விருது வழங்கும் விழாவில் பிரதிநிதிகள் இணையதளம் மூலமாக பங்கேற்கும் நிகழ்வு டெல்லியில் வைத்து 20.06.2020 அன்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பாரத பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வாக்குகள் அளிக்கப்பட்டது அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தில் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு SKOCH – Order of Merit SKOCH -Gold ஆகிய இரண்டு விருதுகள் (SKOCH விருது) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி, அவர்கள் தெரிவித்துள்ளார்.