தூத்துக்குடியில் நாளை முதல் அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூடியிருக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (06/04/2020) அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் ( கோழி, ஆடு மற்றும் மீன் உட்பட அனைத்து இறைச்சி கடைகளும் ) மூடியிருக்க வேண்டும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. அரசு உத்தரவினை மீறி இறைச்சிக்கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டியிருப்பின் அரசு விதிகளின் படி சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.