தூத்துக்குடி கோவிட் – 19 தகவல்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்த கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் பகுதியைச் சார்ந்த 2 பேர் வீடு திரும்பினர்.

தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் இன்று 101 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் ஆண் – 45 பேர்,
பெண் – 43 பேர்,
ஆண்குழந்தை – 6 மற்றும்
பெண் குழந்தை – 7 பேர் என 101 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் சமீபத்தில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் இருவரும் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் பழங்களை கொடுத்து, 14 நாள்கள் வீடுகளில் இருவரும் தனிமையாக இருக்கும் படி அறிவுறுத்தி அவர்களை வழியனுப்பி வைத்தார்.