தூத்துக்குடி – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேருக்கு கொரோனா தொற்று – மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டது போல்டன்புரம் பகுதி.

தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அப்பகுதிக்குள் வெளி நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள் ஆய்வு பணியை தொடங்கியிருக்கிறார்கள். வீடுவீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், சளி இருக்கிறதா? எத்தனைபேர் முதியோர் எத்தனை பேர் சிறுவர்கள் என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்டன்புரம் பகுதியில் முதற்கட்டமாக 10 நபர்களுக்கு மேல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது மீண்டும் அப்பகுதியில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் 8 பேர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரில் நடந்த திருமணநிகழ்ச்சியில் மாப்பிள்ளைவீட்டார் சென்னையிலிருந்து வந்திருந்தனர். இந்தநிலையில் பெண்ணின் தகப்பனார் மற்றும் அவர்கள் வீட்டில் வேலைபார்த்த பெண் ஒருவர் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் மற்றும் சென்னையிலிருந்து வந்திருந்தவர்கள் மூலம் மூன்றுபேர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஊர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா பரவல் காரணமாக தூத்துக்குடி தாசில்தார், தூத்துக்குடி யூனியன் பி.டி.ஓ, குமாரகிரி வி.ஏ.ஓ, புதுக்கோட்டை காவல் ஆய்வாளர், குமாரகிரி ஊராட்சி தலைவர், சுகாதாரபணியாளர்கள் கூட்டாம்புளியில் முகாமிட்டுள்ளனர்.