தூத்துக்குடி – கொரோனாவுக்கு ஒரே நாளில் இருவர் பலி

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த உப்பள தொழிலாளி முனியசாமி (39) சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பிற்பகல் உயிரிழந்தார்

கடந்த 14ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்தபோது, 15ம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் தூத்துக்குடி மையவாடியில் சுகாதாரத்துறையினர் நேற்று மாலை அடக்கம் செய்தனர்.

முன்னதாக நேற்று காலை 72 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார் . இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.