மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வாழ்த்து பெற்றார்!

தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் மகாராஜன். தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி சந்திரா. தலைமைஆசிரியையாக பணிபுரிகிறார். இத்தம்பதியின் மகன் விஜய் பிரவீன் மகாராஜன்.

இவர் தற்போது ஜெர்மனியில் சிமென்ஸ் எனும் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் சிறந்த டேட்டா சைன்டிஸ்ட் விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திரு.விஜய் பிரவீன் மகாராஜன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்களை சந்தித்து பெங்களூரில் நடைபெற்ற டேட்டா சயின்ஸ் கருத்தரங்கில் கலந்துகொண்டு இந்திய அளவில் 40 வயதிற்கு கீழ் உள்ளோருக்கான பிரிவில் விருது பெற்றதை காண்பித்து வாழ்த்து பெற்றார்.