தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் (31.03.20) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் சமூக பொறுப்பு நிதியிலிருந்து தலா ரூபாய் 45 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான மற்றும் சுவாச கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக CPAP மெஷின்களை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருவாசகமணி அவர்களிடம் வழங்கினார். அருகில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப, தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு சிம்ரோன் ஜீத் காலோன் மருத்துவ பேராசிரியர் டாக்டர்.ஜெயமுருகன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
