கொரோனா சானிடைசர் கருவிகள்

கைகளை சானிடைசரால் சுத்தம் செய்ய காலால் இயக்கப்படும் சானிடைசர் கருவியை தூத்துக்குடியில் உள்ள வீனஸ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் வடிவமைத்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுவியுள்ளது. இந்த சானிடைசர் கருவிகளும் கை அலம்ப வாஷ் பேசின்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிறுவப்பட இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி அவர்கள் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.