வெறிசோடிய நிலையில் காணப்படும் தூத்துக்குடி படகு குழாம்

தூத்துக்குடி மாநகர மக்களுக்கு போழுதுபோக்கு அம்சங்களாக பூங்காக்கள் மட்டுமே இருந்து வந்தது. இதனால் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் இயற்கையாக கடல் நீர் குளம் போல் தேங்கி கிடக்கும் பகுதியில் படகு குழாம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் படகு குழாம் செயல்பட தொடங்கியது.

இங்கு தினந்தோறும் மக்கள் அதிக அளவில் வந்து படகுகளில் சவாரி செய்து வந்தனர். விடுமுறை நாட்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்த தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி ரோச் பூங்கா, முத்து நகர் கடற்கரை பூங்கா, ராஜாஜி பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டன. மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் வர அனுமதிக்கப்படவில்லை . இதனால் தூத்துக்குடி மாநகரில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது, அந்த வகையில் படகு குழாம் அமைந்து உள்ள பீச் ரோடும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி காணப்படுகிறது. இதனால் படகு குழாம் களை இழந்து காணப்படுகிறது.