தூத்துக்குடி-இல் 258 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் பறிமுதல்

01.08.2019 அன்று திரேஸ்புரம் கடற்கரைக்கு கிழக்கே 1.25 கிலோமீட்டர் தொலைவில் கடல் பகுதியில் வனஉயிரின சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் ரோந்து பணியில் இருக்கும்போது சந்தேகத்திற்கு உண்டான பைபர் போட்டை சோதனை செய்யும்போது இந்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. இரண்டு நபர்கள் (A1. Raj, S/o, V. Robert, (Age 45 /19) No. 3, Thamotharnagar first Street, Thoothukudi, A2. Bensigar, S/o, Singiraman, (Age 27/19), 5/448, Loorthammalpuram, Thoothukudi), பைபர் போட், 16 சாக்கு மூட்டைகளில் 258 கிலோ கடல் அட்டைகள் ஆகியவற்றை   வனத்துறை அதிகாரி ரகுவரன் தலைமையில் வனவர் அருண்குமார் & மதனகுமார்,  வனக்கப்பாளர்கள் சடையாண்டி, பாரதி, ராஜ்குமார் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்களால் கைப்பற்றப்பட்டு பிடிபட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Credits : Reporter Ravi

16 சாக்கு மூட்டைகளில் 258 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள்