tuty

திருச்செந்தூர் கோவில் மாசி திருவிழா ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில்; நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்ததாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா 28.02.2020 முதல் 10.03.2020 வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பக்தர்கள் வசதியாக வந்து செல்ல தேவையான தங்கும் வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். 

பக்தர்களுக்கு தற்காலிக குடிநீர் வழங்குவதற்கான சிறு குடிநீர் தொட்டிகளை வைக்க வேண்டும். ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் குடிநீர், தற்காலிக கழிப்பறை, தற்காலிக தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும். குடிநீர் வழங்கும் அனைத்து தொட்டிகளை நன்றாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். மின்சாரத் துறையின் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தொடர்ந்து கூடுதல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மூலம் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு கூடுதல் வாகனம் மற்றும் பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும். கடலில் அதிக நபர்கள் குளிப்பதால் மீன்வளத் துறை மூலம் படகுகள் மற்றும் அவசர காலத்தில் உதவும் வகையில் மீனவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாசி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட எஸ்பி., அருண் பால கோபாலன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் அம்ரீத் பழனியப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், கோட்டாட்சியர்கள் தனப்ரியா, (திருச்செந்தூர்), விஜயா (கோவில்பட்டி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)அமுதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், உதவி ஆணையர் (கலால்) சுகுமார், திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பரத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *