திருச்செந்தூர் கோவில் வளாக சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்கள் – டி.எஸ்.பி. பாரத் வழங்கினார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டதால் கோயில் வளாக சிறு வியாபாரிகள் 75 பேருக்கு போலீஸ் சார்பில் நிவாரண பொருள்களை டி.எஸ்.பி. பாரத் வழங்கினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கோயில் வளாகத்தில் சிறு வியாபாரத்தில் ஈடுப்பட்ட வந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன. டீ, ஐஸ், வடை, சுண்டல், பூ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கோயில் வளாகத்தில் வியாபாரத்தை இழந்து வருமானமின்றி தவிக்கும் 75 குடுபங்களுக்கு திருச்செந்தூர் போலீஸ் தரப்பில் தலா 5 கிலோ அரிசி, 18 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

திருச்செந்தூர் ஜீவாநகரில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.எஸ்.பி. பாரத் நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.