சிபி சிஐடி ஐஜி சங்கர் அவர்கள் இன்று ஆய்வு: சாத்தான்குளம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் பென்னீக்ஸ் இருவரை காவல்துறையினர் அடித்து படுகொலை செய்த இந்த வழக்கு விசாரணை என்பது தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள் இன்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் காவல் நிலையம் அரசு மருத்துவமனை அதேபோல ஜெயராஜின் வீடு அதே போல் அவர்கள் இந்தப் பகுதி அங்கு உள்ள வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர் மேலும் கோவில்பட்டி கிளைச் சிறையிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த விசாரணையை ஆய்வு செய்வதற்காக சிபி சிஐடி ஐஜி சங்கர் சாத்தான்குளம் அருகே வந்தார் அவரும் அவருடைய எஸ்பி விஜயகுமாரும் வருகை தந்து சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு உள்ள ஆவணங்கள் மற்றும் சிசிடிவி பார்வையிட்டு ஆய்வு செய்தனர் தொடர்ந்து ஜெயராஜ் வீட்டிற்கு சென்ற ஐஜி சங்கர் அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார் தொடர்ந்து சாத்தன்குளம் பஜாரில் உள்ள அவர்களின் செல்போன் கடை வைத்திருக்கும் வருகை தந்து அங்கும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய சிபிசிஐடி ஐஜி சங்கர் தரமான விசாரணை நடைபெற்று வருகிறது விரைவில் குற்றப்பத்திரிகையில் மாற்றம் ஏற்படலாம் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்