பணத்தை விட்டு விட்டு வெங்காயத்தை குறிவைக்கும் திருடர்கள்

கொல்கத்தாவில் சுடகாட்டா பகுதியில் வெங்காய கடையில் புகுந்த மர்ம நபர்கள், கல்லாப்பெட்டியைத் திறந்து பார்த்தும், அதில் இருந்த பணத்தை அப்படியே வைத்துவிட்டு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெங்காய மூட்டையை திருடிச் சென்றுள்ளனர். வெங்காயத்தை போலவே இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்டவற்றையும் அவர்கள் திருடியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.