ஏமாற்றத்துடன் வெளியேறிய திருடர்கள்: தூத்துக்குடி

தூத்துக்குடி நிகிலேஷன் நகரில் திருட வந்த திருடர்கள் வீட்டில் விலைமதிப்புள்ள பொருட்கள் இல்லாததால் ஆத்திரத்தில் அங்கு இருந்த பொருட்களை தூக்கி எரிந்து ஏமாற்றத்துடன் வெளியேறிய திருடர்கள். அதனை தொடர்ந்து தகவல் அறிந்த சிப்காடு காவல்துறையினர் சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்றவர்களில் வீடுகளில் கொள்ளை அடிக்க முயற்சி காவல்துறை விசாரணை

தூத்துக்குடியில் நிகிலேஷன் நகர் பகுதியில் உள்ள மல்லிகா என்பவருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன இந்த வீடுகளில் ஜெயப்பிரகாஷ் மற்றும் உபைது ரஹ்மான் ஆகிய இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு இருந்து வருகின்றனர்இதில் ஜெயபிரகாஷ் பொறியாளராகவும் உபைது ரஹ்மான் பிஸ்கட் வியாபாரம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இவர்களின் இரண்டு குடும்பத்தினரும் அவர்களின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர் ஜெய பிரகாஷ் மற்றும் உபைது ரஹ்மான் அவ்வப்போது வீடுகளுக்கு வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளனர் இந்த நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் மற்றும் உபைதுர் ரகுமானிடம் தகவல் தெரிவித்தனர் தொடர்ந்து விரைந்து வந்த அவர்கள் பார்த்த வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன இதுகுறித்து சிப்காட் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர் இதைத் தொடர்ந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது இந்த இரண்டு பேரின் வீடுகளிலும் உள்ள தங்க நகைகள் மற்றும் பணம் ஏதும் வைக்கவில்லை எனவும் அவர்களின் சொந்த ஊருக்கு சென்ற போது நகை மற்றும் பணத்தை எடுத்து சென்றுள்ளனர் இதனால் கொள்ளையர்களுக்கு ஏதும் சிக்காத காரணத்தால் பீரோல்களை உடைத்து அதிலுள்ள பொருட்களை வீசி எறிந்து விட்டு சென்றது தெரியவந்தது தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் ஆளில்லா வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த கொள்ளைமுயற்சி சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்