தெர்மல்நகர் காவல் நிலையம், 86.79 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றம்…

தூத்துக்குடி மாவட்டம் : 86.79 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு தெர்மல்நகர் காவல் நிலையம் இன்று (06.03.2020) மாற்றம் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு காவல் நிலைய பணிகள் சிறக்க வாழ்த்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் காவல் நிலையம் பாரதி நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கென தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் ரூபாய் 86.79 லட்சம் செலவில் துறைமுக மருத்துவமனை அருகில் தெர்மல்நகர் லேபர் காலணியில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை கடந்த 22.02.2020 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.

திறந்து வைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு இன்று (06.03.2020) தெர்மல் நகர் காவல் நிலையம் மாற்றப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு காவல் நிலைய பணிகள் சிறக்க வாழ்த்தினார்.

இதில் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், தெர்மல் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. கோகிலா, முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் திரு.அன்னராஜ், தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.