சசிகலாவை பற்றி யோசிப்பதற்கு தற்போது நேரமுமில்லை, அவசியமுமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

சசிகலா வரும் ஆகஸ்டு மாதம் விடுதலையாகலாம் என்ற நிலையில் அரசியல் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு,

சிறைதுறை விதியின் படி சசிகலா மட்டும் அல்ல எந்த குற்றவாளியாக இருந்தாலும் தண்டணை காலம் முடிந்து அதை முடிவு பண்ண வேண்டியது விடுதலை குறித்து முடிவு பண்ண வேண்டியது சிறைதுறையும்,நீதிமன்றமுமே தவிர அரசியல் கட்சிகள் இல்லை.
தற்போது கொரோனா நோய் தொற்றை குறைக்கும் பணியில் அரசு முழுமுச்சாக 24 மணி நேரமும்
செயல்பட்டு வரும் நிலையில் இது குறித்தெல்லாம் யோசிபதற்கான தருணமும் இல்லை,அதற்கான நேரமும் இல்லை, அவசியமில்லை என்றார்.