தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் மூலம் கடந்த 4 நாட்களில் புதிய பாதிப்பு இல்லை – மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் கூறியதாவது- “தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 26 பேரில் 2பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் இறந்துவிட்டார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். கடந்த 4 நாட்களாக புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படவில்லை. மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தனித்தனி அறைகள் கொண்ட 136 படுக்கை வசதியுடன் கூடிய தனி மருத்துவ பிரிவு கொரானா சிகிச்சைக்கு என ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை அப்பிரிவில் covid சந்தேகம் உள்ள 140 உள்நோயாளிகள் மற்றும் 200 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் 140 Swab test எடுக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் மட்டும் 21 நோயாளிகளுக்கு +ve என அறிவிக்கப்பட்டு அதில் ஒன்று இறப்பு ஏற்பட்டுள்ளது. மற்றும் நேற்றையதினம் (15.4.2020) 2 நோயாளிகள் சிகிச்சை முடிவுற்று நல்ல முறையில் விடுவிக்கப்பட்டார்கள். Covid சிகிச்சைக்கு என மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பாணித்துறையினர் இணைந்து 80 தனிஅறையுடன் கூடிய படுக்கை வசதிகள் கிட்டத்தட்ட 30 லட்சம் மதிப்பில் வசதி செய்து கொடுத்து உள்ளார்கள்.

மேலும் Covid பரிசோதனைக்காக Biochemistry துறையில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள RTPCR என்னும் CoVid 19 வியாதியை கண்டுபிடிக்கும் கருவி விரைவில் செயல்பட உள்ளது மற்றும் 10 லட்சம் மதிப்பிலான புதிய X-ray கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது.

இதைத்தவிர்த்து இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் 180 முதல் 200 வரையிலான கர்ப்பிணி சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் இதுநாள் வரை தினந்தோறும் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிட்டத்தட்ட பொதுப்பிரிவில் 20 உள்நோயாளிகள் தினந்தோறும் நல்லமுறையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர்.

எல்லா உள்நோயாளிகளும் பாகுபாடின்றி நல்லமுறையில் கவனிக்கப்பட்டு அவர்களுக்கு நல்ல உணவு அளிக்கப்பட்டு வருகிறது. Covid பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு தினந்தோறும் ஒரு நோயாளிக்கு ரூ.300 மதிப்புமிக்க சத்தான நோய் எதிர்ப்புத் தன்மையை வலுப்படுத்தக்கூடிய உணவுகள் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு பிரத்யேகமாக அளிக்கப்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனையில் பல்வேறு குழுக்கள் அமைத்து Covid பணிகளை முதல்வர் அவர்கள் தலைமையில் செய்து வருகிறார்கள். முக்கியமாக Covid நோயாளிகளுக்கு மருத்துவம் மற்றும் உணவு மனநலம் போன்றவைகளை மிகத் தீவிரமாக தினமும் பணியில் இருக்கும் மருத்துவ குழுவினர் கண்காணிக்கின்றன.

இம்மருத்துவமனை முழுவதும் தினந்தோறும் ஐந்து முறை கிருமி நாசினி தெளித்து சுகாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு உரிய உபகரணங்கள் தேவையான அளவில் இருப்பு உள்ளது. இன்றுகூட PPE kit – 50, N95 Mask -200 பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய எந்த தடையும் இல்லாமல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

Covid மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தங்குமிடம், சிறப்பான சத்தான உணவுகளை மருத்துவமனை நிர்வாகம் தயாரித்து நேரம் தவறாமல் வழங்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 50 முதல் 60 உணவு உண்டும் தங்கியும் Covid பணிகளை நல்லமுறையில் கவனித்து வருகின்றனர். மேலும் நேற்று 2 நோயாளிகள் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளின் நலன் கருதி சிறப்பான முறையில் செயல்பட்டு வர உறுதியுடன் உள்ளனர்.” பேட்டியின் போது தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் திருவாசக மணி, உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் உடனிருந்தனர்.