தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை : மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 54 பேர் கொரானா வைரஸ் பாதிப்பு
உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில் : தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை.
தமிழக அரசின் உத்தரவின் படி சீனா,இத்தாலி போன்ற வெளிநாடுகளுக்கு சென்று வந்த 54 பேர் கொரானா வைரஸ் பாதிப்பு எதுவும் உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்ப்பட்டால் அவர்களை கண்காணிக்க அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனியறை தயாராக இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம புறங்களில் கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்க்கொண்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.