சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த வழக்கில் 2உதவி ஆய்வாளர்கள் 2காவலர்கள் உள்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் உதவி. ஆய்வாளர் ரகு கனேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது முழுமையான விசாரணை நடைபெற்று வரும் பொழுது இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பது தெரியவரும் அதன் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி போலிசார் 12 குழுக்களாக தங்களது விசாரணையை துவங்கினர். சிபிசிஐடி ஐஜி சங்கர் சாத்தான்குளத்தில் விசாரணையை மேற்கொண்டதை தொடர்ந்து தூத்துக்குடி அலுவலகத்தில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷிடம் விசாரணை மேற்கொண்டார்
சிபிசிஐடி ஐஜி சங்கா் பேட்டி:
சிபிசிஐடி இரண்டு வழக்குகள் பதிவு செய்து. அதில் ஒன்று கொலை வழக்காக பதிவு செய்து ஒரு எஸ்ஐ கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சில அதிகாரிகள் பற்றி நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விசாரணை க்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் கட்ட விசாரணை யில் நான்கு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை யில் போக போக இன்னும் நிறைய விஷயங்கள் தொியவரலாம் என்றார் .
இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் ரகு கணேஷை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்
