சிகரம் அறக்கட்டளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் : சாத்தான்குளம்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் சிகரம் அறக்கட்டளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது

இந் நிகழ்ச்சிக்கு சிகரம் அறக்கட்டளை நிறுவனர் முருகன் தலைமை வகித்தார். ஜெயசீலன் முன்னிலை வகித்தார். இதில் வட்ட சட்டப்பணிக்குழு உதவியாளர் மகேந்திரன் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பாதுகாக்கும் முறை குறித்து பேசினார்.

இதையடுத்து பொதுமக்களுக்கு மா, புங்கை, வேப்பம், சீதா மர கன்றுகளை வழங்கப்பட்டது. இதில் மாணிக்கம், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.