தோல்விக்கு என்றே பிறப்பெடுத்த துரதிர்ஷடக்காரன்…!

பிழைக்க தெரியாத முட்டாள் என்று அந்த 18 வயது சிறுவனை திட்டினார் அவரது அப்பா. தோல்விக்கு என்றே பிறப்பெடுத்த துரதிர்ஷடக்காரன் என்று கேலி பேசினர் அவனது நண்பர்கள். அவன் நடந்த தொடர் தோல்விகளை உலகில் வேறு யாராவது அனுபவத்தை இருந்தால் எப்போதோ தற்கொலை முடிவுக்கு போயிருக்கக் கூடும். அத்தனை தகுதிகளையும் உள் வாங்கி கடைசியில் பிரம்மாண்டமான வெற்றியை சாதித்த அந்த மாமனிதர் சாய்க்கிரோ ஹோண்டா. தனது வாழ்க்கை அனுபவத்தை சாறு பிழிந்து சொன்னார்: வெற்றி என்பது 99% தோல்வி’.

டயோட்டா கம்பெனிக்கு பிஸ்டன் தயாரிக்கும் தொழில் கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவன் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு. யாருக்காகவும் அவன் காத்திருக்கவில்லை. அப்பாவின் வசவு சக மாணவர்களின் பரிகசிப்பு இடையே மாதிரி மூளை கூடம் ஒன்றை உருவாக்கினார். இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு உழைத்து உருவாக்கிய மாதிரி பிஸ்டனை பெரும் எதிர்பார்ப்புடன் டயோட்டா கம்பெனிக்கு எடுத்து சென்றான். ‘எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உணர்வு பிஸ்டன் இல்லை என்று கேலி பேசி நிராகரித்து விட்டார்கள் பொறியாளர்கள்’ .

முதலாவது கனவு திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீட்டு மொத்தமும் காலி. எல்லோரும் வசைமாரி பொழிந்தார்கள். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் ஞானியின் மன பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். பல மாதங்கள் விடாபிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புது பிஸ்டன் மாதிரியை டயோட்டா கம்பெனி பாராட்டி ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு.

பெரிய தொழில் கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் பிஸ்டன் தயாரிக்க முடியும். எனவே கட்டிடம் கட்ட திட்டமிட்டார் ஹோண்டா.

அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்கு தயாராகி கொண்டு இருந்ததால் அங்கே வரலாறு காணாத சிமெண்ட் தட்டுப்பாடு. எவ்வளவோ முயற்சி செய்த போதும் பத்து மூட்டை சிமெண்ட் கூட கிடைக்கவில்லை.

‘ஒழுங்கா ஏதாவது வேலையை போய் சேர்ந்து விடு’ என்றார் அப்பா. “வாழ்க்கை முழுவதும் அதிகரித்துக் கொண்டே இருப்பாய் என திட்டினான்’ உயிர் நண்பன்.

தனது நலன் விரும்பிகள் உடன் விவாதித்து சிமெண்ட் கலவை க்கு இணையான மாற்றத்தை உருவாக்கும் பார்முலாவை கண்டுபிடித்தால் ஹோண்டா. ஆங்காங்கே கடன் வாங்கிய அடுத்த சில மாதங்களில் பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி பிஸ்டன் தயாரிக்கும் தொழில் அமர்க்களமாக தொடங்கியது.

கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது. அமெரிக்காகாரன் போட்டோ கொண்டு ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து சுக்கு நூறாகியது.

ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால் தனது மொத்த தொழிலாளர்களையும் திரட்டி தானே களமிறங்கி ஈடுபாடுகள் சீர்செய்து தொழிற்சாலையை மீண்டும் இயக்கி கட்டினார் ஹோண்டா.

இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப் பாருங்கள். ஹோண்டா தனது அப்போதைய நிலைமை பற்றி சொல்கிறார். ‘நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்ததால், துளிக்கூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்க தொடங்கி விடுவேன்”.

இரண்டாம் உலகப்போர் முடிந்து வந்த நேரம். ஜப்பான் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட காலகட்டம். எங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கி விட்டன. எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிள் மிதிக்கிறார்கள்.

சாய்க்ரோ ஹோண்டா வீட்டில் அமர்ந்திருக்கிறார். அருகில் சைக்கிள் இருக்கிறது. சற்று தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருக்கிறது. இந்த புல் வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரை கழற்றி இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன ?ஹோண்டா வுக்கு ஒரு புத்தம் புது ஐடியா பளிச்சிடுகிறது.

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கி விட்டார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரை கழற்றி எடுத்து தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது. தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஜம்மென்று சுற்றிவந்தார் ஹோண்டா. அதேபோன்று எனக்கும் செய்து கொடு என்று மொய்க்க தொடங்கினார்கள் மக்கள். அனைவருக்கும் சளைக்காமல் செய்து கொடுத்தார். விளைவு? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.

இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன? சிந்தித்தார் ஹோண்டா. கையில் பணம் இல்லை. வங்கிகள் கடன் தர தயார் இல்லை. ஹோண்டா துரதிர்ஷடக்காரன் இன்று எல்லோரும் சான்றிதழ் கொடுத்து வைத்திருந்தார்கள்.

கலங்கவில்லை ஹோண்டா. எனது தொழில் திட்டத்திற்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து ஜப்பானில் உள்ள பதினெட்டாயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார். முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள் மோட்டார் சைக்கிள் விநியோகததாரக நியமிக்கப்படுவார்கள் என உறுதியளித்தார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் கம்பெனி உதயமானது. முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்த விமர்சனங்கள் வந்தபோது தானே உலைக்கூடத்தில் அமர்ந்து அற்புதமான மோட்டார் சைக்கிளில் ராகங்களை கொண்டு வந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்ரோ ஹோண்டா.

இப்போது ஹோண்டா கம்பெனி ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் பைக்குகள் தயாரிக்கிறது. ஹோண்டா காடுகளுக்கு மேலை நாடுகளிலும் பெரும் வரவேற்பு. எத்தனையோ வகையான தயாரிப்புகளில் வெற்றிக்கொடி நாட்டி உள்ளது ஹோண்டா.

ஹோண்டா தயாரிப்புகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவு வருவது அதன் பிதாமகன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவத்தை சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்.

” வெற்றி என்பது 99 சதவீதம் தோல்வி”