எட்டயபுரத்தில் கொரோனா பரவுவதை தடுக்க இன்று முதல் 5 நாட்கள் கடைகளை அடைக்க வர்த்தகர்கள் சங்கம் முடிவு

எட்டயபுரம் பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக எட்டயபுரத்தில் வணிக நிறுவனங்கள் இன்று முதல் 15.7.20முதல் 19.7.20 வரை கடைகள் திறக்கபடாது என்று எட்டயபுரம் வர்த்தகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக நேற்று நடந்த கூட்டத்திற்கு எட்டயபுரம் வர்த்தகர்கள் சங்க தலைவர் ராஜா தலைமை வகித்தார். பொருளாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார். செயலாளர் அய்யனார் துணைத்தலைவர் வெங்கடேஷ்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டமுடிவில் இன்று முதல்( ஜூலை15.7.20) முதல் 19.7.20 வரை கடைகள் திறக்க படாது என முடிவு செய்யப்பட்டது. அதே போல் மருந்துகடை. பால்கடை வழக்கம் போல் திறந்திருக்கும். எனவே எட்டயபுரம் சுற்றுவட்டார கிராமமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு வர்த்தக சங்க தலைவர் ராஜா பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.