இன்று மற்றும் நாளைக்கு பதிலாக மே 2, 3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் – தமிழக அரசு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.அந்த வகையில், அடுத்து மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று மற்றும் நாளை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மற்றும் நாளைக்கு பதிலாக மே 2, 3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மே 4 முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கடைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.