இம்மாதம் 24, 25இல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும்! – தமிழக அரசு அறிவிப்பு.!

நியான விலை கடைகளில் மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்க இம்மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினக்கூலிகள், கட்டட வேலைகள் செய்பவர்கள் என சில அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள், தொழிலாளர்கள் என பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக நியாய விலைக்கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில், அடுத்து மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க இம்மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் எனவும், அந்த டோக்கனில் குறிப்பிட்ட தேதிகளில் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து இலவச பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.