ஒரு நாள் திருடவில்லை என்றாலும் தூக்கம் வராது சார்- திருடனின் வாக்குமூலம்

ஓமலூரைச் சேர்ந்த அய்யந்துரை என்பவர் சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றி வந்ததால் போலீஸார் பிடித்து அவரை விசாரித்தப்போது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அய்யந்துரை, கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்து 40 நாட்கள் ஆவதாகவும், அந்த 40 நாட்களும் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையின் மூலம் அய்யந்துரையிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள், பத்து சவரன் நகை, ஒரு முருகன் சிலை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவரை விசாரித்த போலீஸாரிடம் கடந்த 30 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ள எனக்கு ஒரு நாள் திருடவில்லை என்றாலும் தூக்கம் வராது என விசாரணையின்போது அய்யந்துரை கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.