தற்காலிகமாக மூடப்பட்ட தனியார் மருத்துவமனை மீண்டும் செயல்பட தொடங்கியது.

தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் ஊழியருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதனால் அந்த மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு அந்த மருத்துவமனையில் முழுவதும் கடந்த சில வாரங்களாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. அந்த பணிகள் முடிக்கப்பட்டு மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளுக்கான
முதல் கட்ட ஆய்வு அதன்படி கடந்த 17-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர், தூத்துக்குடி மாநகர நல அலுவலர் அருண்குமார் முன்னிலையில் முழுமையாக ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு மருத்துவமனை திறப்பதாக சான்றிதழும் அளிக்கப்பட்டது. நேற்று முதல் தனியார் மருத்துவமனை மீண்டும் செயல்பட தொடங்கியது. மருத்துவமனை ஊழியர்கள் பெரும்பாலானவர்களுக்கு ஏற்கனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதனால் நேற்று ஊழியர்கள் பலர் மருத்துவமனைக்கு வந்து இருந்தனர். குறைந்த அளவில் டாக்டர்களும் வந்தனர். ஒரு சில நோயாளிகள் மட்டும் பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.