1300 புத்தகங்களை பயன்படுத்தி சரஸ்வதிக்கு கோயில் கட்டிய ஆசிரியர் -கரூர்

கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் விஜயதசமி விழாவை முன்னிட்டு, சரஸ்வதிக்கு 1300 புத்தங்களை கொண்டு அமைத்திருக்கும் கோயில், பார்வையாளர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.கலைமீது தீராத காதல்கொண்டவர் தங்க.கார்த்திக், இவர் ஒவ்வொரு தமிழர் விழாக்களையும் வித்தியாசமான கலை மூலம் கொண்டாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தவகையில், இவர் தான் பணிபுரியும் பள்ளியில், விஜயதசமி விழாவை மாணவர்கள் சிறப்பாக கொண்டாதுவதற்க்காக, தனது பள்ளியின் நூலகத்தில் உள்ள 1300 புத்தகங்ளைக் கொண்டு கோயில் அமைத்திருப்பது, பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.