தூத்துக்குடியில் திடீர் மழை மண்ணும் குளிர்ந்தது மக்கள் மனமும் குளிர்ந்தது

தூத்துக்குடியின் புறநகர் பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் சிறிய அளவில் தொடங்கிய மழை ஒரு 30 நிமிடம் வெளுத்து வாங்க தொடங்கியது. தூத்துக்குடியில் இன்று (11.7.2020 ) மாலை பெய்த தென் மேற்கு பருவ திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தூத்துக்குடியில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. ஏற்கெனவே ஊரடங்கால் வீட்டில் முடங்கிய மக்கள் கோடை வெப்பத்தால் தவித்து வந்தனர். எதிர்திசை காற்றின் காரணமாக, 16 மாவட்டங்களில், கன மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இன்று ( 11.7.2020 ) தூத்துக்குடியின் புறநகர் பகுதியில் மாலை 6 மணியளவில் சிறிய அளவில் ஒரிரு நிமிடங்கள் மட்டும் மழை விட்டு விட்டு பெய்தது.