பதக்கம் வாங்கிய மேடையில் குடியுரிமை சட்டநகலை கிழித்தெறிந்த மாணவி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் என்ற பல்கலைக்கழகத்தில் இன்று பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்மிதா சவுத்ரி என்ற மாணவி தங்கபதக்கம் வாங்குவதற்காக அழைக்கப்பட்ட போது அந்த மாணவி, திடீரென மறைத்து வைத்திருந்த குடியுரிமை சட்டத்தின் நகலை மேடையிலேயே கிழித்து எறிந்து அதன் பின்னர் தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டு ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று கூறிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.