ஊரடங்கால் சமையல் கலைஞா்களின் நிலை கேள்விக்குறி ஆகிவிட்டது

தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு தடை உத்தரவால் பல்வேறு சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டு தொழிளார்களின் நிலைமை கவலைக்குரியதாக இருக்கின்றது. இந்நிலையில் சுப நிகழ்ச்சிகளில் சுவையான உணவை சமைத்து வருகின்ற விருந்தினா்களை வயிறு நிறைய சாப்பிட வைத்து வாயார வாழ்த்து சொல்ல வைக்கின்ற சமையல் கலைஞா்களின் தொழிலும் இவா்களை நம்பி சமையல் செய்யும் பொருட்களை வாடகைக்கு கொடுப்பா்களின் வருமானம் இந்த கொரோனா வைரஸ் நோயால் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமையல் கலைஞா்கள் நமது Timestampnews செய்தியாளர்களிடம் கூறும் போது, சமையல் கலைஞா் அய்யாசாமி கூறும் போது பல ஆண்டுகளாக நான் சமையல் தொழில் செய்து வருகிறேன் என்னை நம்பி பதினைந்து இருபது தொழிலாளா்கள் இருக்கின்றாா்கள் இந்த ஊரடங்கு வந்த நாளில் இருந்து சாப்பாட்டுக்கு ரொம்பவும் கஷ்டப்படுகிறேன் அரசாங்கம் எங்கள் தொழிலாளா்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றாா். அதனை தொடா்ந்து சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு கொடுத்து வரும் பரமசிவம் அவா்கள் கூறும் போது தமிழ்நாடு சமையல் கலைஞா்கள் தொழிலாளா்கள் சாா்பாக பேசுகிறேன் நாங்கள் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாக இந்த சமையல் தொழில் செய்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் 1500-க்கு மேற்ப்பட்ட சமையல் கலைஞா்கள் சமையல் தொழில் செய்து வருகிறோம் எங்கள் குடும்பங்கள் சமையல் தொழிலை நம்பி வாழ்வாதாரமாக கொண்டு வருகிறது. திருமணம், சடங்கு, புதுமனை புகுவிழா போன்ற விசேஷங்களுக்கு சமையலுக்கு செல்வோம், இந்த தடை உத்தரவு போட்ட ஒன்னரை மாத காலமாக நாங்கள் சமையல் தொழிலுக்கு செல்லவில்லை எங்களுடைய வாழ்வாதாரம் ரொம்பவும் பாதிக்கப்பட்டுள்ளது அரசாங்கம் எங்கள் தொழிலாளா்களுக்கு முன்னேற்பாடாக உதவி செய்ய வேண்டுகிறோம் என்றாா். பல சுப நிகழ்ச்சியில் பலருடைய வயிறுகளை உணவால் நிரம்பச் செய்த சமையல் கலைஞா்களை பட்டினியில் இருந்து காப்பாற்றுவாா்களா? அரசு உதவி செய்வாா்களா? அல்லது அரசியல் கட்சியை சாா்ந்தவா்கள் உதவிக்கரம் நீட்டுவாா்களா? சமையல் கலைஞா்களின் வாழ்வு மணம் வீச தொடங்குமா…..?