அச்சுறுத்தும் கொரோனா தொற்றை விரட்ட தொடர்ந்து ஆறாம் கட்ட கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

உலகமெங்கும் கொரோனா நோய் தொற்று பரவலின் காரணமாக மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பல்வேறு அமைப்பு சார்ந்த பொதுநல தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் மக்கள் நலன் கருதி அச்சுறுத்தும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக கபசுரக் குடிநீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இன்று ஆறாம் கட்ட கபசுரக் குடிநீர் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் தருவைக்குளம் 40 வீடு காலனி, வாதிரியார் தெரு மக்கள் பயன்பெறும் வகையில் தருவைக்குளம் 40 வீடு காலனி ஜெயசீலன் (நாட்டுக்கொட்டையார்) கடை அருகில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் இலவச கபசுரக் குடிநீர் மற்றும் தருவைகுளம் சமூக ஆர்வலர் கென்னடி ராஜ் அவர்கள் சார்பில் இலவச முகக்கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தருவைக்குளம் ஊராட்சி மன்ற தலைவி திருமதி. கா. காடோடி கலந்து கொண்டார்கள், மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் கபசுரக்குடிநீரை பெற்றுச் சென்றார்கள். இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே அவர்கள், தருவைகுளம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அமலதாசன் (எ) பழம், காமராஜர் நற்பணி மன்ற பொருளாளர் தேவ திரவியம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சூசை அந்தோணி, செல்வராஜ், பவுல் ராஜ், வில்சன், கிறிஸ்டின் ராஜ், வெல்லிங்டன், ராபின், ராஜன், கார்த்திக், ஜெயக்குமார்,கெய்ட்டின் ராஜ், டிக்கு ரோஸ், நீக்குலாஸ், பெட்ரிக், ராஜன், வில்சன், தருவைகுளம் சமூக ஆர்வலர் கென்னடி ராஜ், சமூக ஆர்வலர் ஜெனார்தனன் டேவிட் மற்றும் பொதுநலத் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் S.A. லாரன்ஸ், D. அசோகன் அவர்கள் செய்திருந்தார்.