தூத்துக்குடியில் தடைக்கு பிறகு திறக்கப்பட்ட தையல் கடை: தொழிலாளர்கள் மகிழ்ச்சி

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஊரடங்கு தடை பிறப்பிக்கபட்டது. தற்போது தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் பாரதீய தையல் தொழிளாலர் சங்கத்தில் மாவட்ட செயலாளராக பணிபுரிந்து வரும் ரகுராமன் அவர்கள் ஊரடங்கு தடைக்கு பிறகு கடை திறப்பினை பற்றி செய்தியாளர்களிடம் கூறும் போது: கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தமிழக அரசு நிவாரண நீதியாக 1000 ரூபாய் வழங்கியுள்ளது. பாரதீய தையல் தொழிளாலர் சங்கத்தில் 60 முதல் 70 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 50 பேருக்கு தமிழக அரசு நிவராணம் வழங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் கொரானா பாதிப்பு தடுப்பதற்காக பாரத பிரதமர் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதனை தமிழக அரசு நல்ல முறையில் செயல்படுத்தியதால் மட்டுமே கொரானா தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மேலும் இந்தியாவின் கலச்சாரம் மற்றும் பண்பாடும் கொரானா தொற்று பரவாமல் இருந்ததுக்கு முக்கிய காரணம் எனவும் கூறினார்.