வாகன ஓட்டிகளுக்கு கைகளை கழுவி சுத்தம் செய்ய தண்ணீர் தொட்டி அமைத்த சாத்தான்குளம் காவல் துறையினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையம், சங்கரன் குடியிருப்பு சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோப்பு மற்றும் கிருமி நாசினி வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி சாத்தான்குளம் போலீசாரால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைச் சாவடியை கடந்து செல்லக்கூடிய அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரும் சரக்கு வாகன ஓட்டுனர்களை அங்கு அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் கிருமிநாசினி அல்லது சோப்பை பயன்படுத்தி கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய அறிவுறுத்தியும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்து சோதனைச் சாவடியில் உள்ள போலீசார் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.