ஒரே நேரத்தில்10,000 ஊழியர்கள் பணி நீக்கம்…

பிரபலமான கார்களான மெர்சிடஸ்-பென்ஸ் கார்களை ஜெர்மனியின் டைம்லர் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது, உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட அந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், 2022ம் ஆண்டு இறுதிக்குள் டைம்லர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மூலம் ஆகும் செலவில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும், இனி எதிர்காலத்துக்கு உகந்த நவீன கார்களை உருவாக்க முதலீடு செய்யவும் டைம்லர் முடிவு செய்து பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக டைம்லர் நிறுவனம் அறிவித்துள்ளது.