இறைமக்கள்யின்றி நடந்த பாதம் கழுவும் சடங்கு – தருவைகுளம்

புனித வியாழன் இயேசு நாதர் சீடர்களுக்கு பாதம் கழுவும் சடங்கு திருப்பலியும், நற்கருணை திரு விருந்தும் நடைபெறும்.

கொரோனா தாக்கம் காரணமாக ஊரெங்கும் 144 தடை பிறப்பிக்கபட்டு இருப்பதால், இன்று புனித வியாழக்கிழமை நடைபெறும் மாலைத் திருப்பலி வழிபாடும் நற்கருணைப் பவனியும் திருஅவையினுடைய திருவழிபாட்டில் தவக்காலம் நிறைவுற்று இயேசுவினுடைய உயிர்ப்பைக் கொண்டாட நம்மையே நாம் தயாரிக்கின்ற விதமாக பாஸ்காவுக்கான மூன்று நாள் தயாரிப்புக்கான ஒரு வழிபாடாக அமைகிறது. எனவே இன்று 09.04.2020 மாலை 6.00 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் தருவைக்குளம் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே, துணைத்தந்தை திலகர், ஆன்மீகத் தந்தை பர்னபாஸ் மற்றும் அருட்சகோதரிகள் மட்டுமே கலந்து கொண்டு இறைமக்கள் யாரும் கலந்து கொள்ளாமல் திருப்பலி நிறைவேற்றினர்.