சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் ரூ.147 உயர்வு

மானியமில்லாத சிலிண்டர் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவினம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் உயர்த்தப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர். மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து 6-வது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெறும் 20 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது அதிகட்சமாக 147 ரூபாய் கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 147 ரூபாய் உயர்த்தப்பட்டு 881 ரூபாயாகும், மும்பையில் 144.50 ரூபாய் உயர்த்து 858.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 896 ரூபாயாகவும், மும்பையில் 829.05 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த விலை உயர்வால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.