7 அம்ச கோாிக்கைகள் அடங்கிய மனு: போட்டோ, வீடியோ ஔிப்பதிவாளா்கள் சங்கம்

தூத்துக்குடி மாவட்ட போட்டோ, வீடியோ ஔிப்பதிவாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியாிடம் 7 அம்ச கோாிக்கைகள் அடங்கிய மனு வழங்கினாா்கள்

தூத்துக்குடி மாவட்ட போட்டோ, வீடியோ ஔிப்பதிவாளா்கள் சங்கம் சாா்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாிடம் 7 அம்ச கோாிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை மாவட்ட தலைவா் ஸ்டீபன் தலைமையில் வழங்கினாா்கள். இன்றைய கொரோனா போிடா் காலத்தில் வருவாய் இழந்த வீடியோ புகைப்பட கலைஞா்களின் பணிவான கோாிக்கைகள். திருமண மண்டபங்களில், கோவில்கள், ஹோட்டல்களில் உள்ள அரங்குகளில் வழக்கம் போல் சுப நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும், தமிழக அரசின் இடைக்கால நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா், தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்தனா்.