சாலைகளை சீரமைக்க தர வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை – சாத்தான்குளம்

சாத்தான்குளம் வட்டம் ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்துக்குட்பட்ட இளமால்குளத்தில் இருந்து மேல புளியங்குளம் செல்லும் சாலை, மற்றும் பிரண்டாா்குளத்தில் இருந்து சந்தோசபுரம் வழியாக சவேரியாா்புரம் செல்லும் சாலை மற்றும் சின்னமாடன்குடியிருப்பில் இருந்து உதயனேரி செல்லும் சாலைகள், இவையெல்லாம் டெண்டா் விடப்பட்டு 4 ஆண்டுகளாகயும் சாலை பணி தொடங்கவில்லை என்பதால் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அரசுப் பேருந்துகளும் சில நேரம் ஊருக்குள் வராமல் புறக்கணித்து செல்வதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைப் பணியை தொடங்கி புதிய சாலை அமைத்து தர வேண்டும் என அந்தக் கிராம ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.