இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய ஆன் லைன் தோழி !

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளைஞரை அவருடன்  ஆன்லைனின் பேசிக் கொண்டிருந்த தோழி அவருக்கு  உதவி செய்த அனுபவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் நாட்டில் எட்சன் என்ற 17 வயது ஜாக்சன் என்ற இளைஞர்  தனது வீட்டு மாடியில் இருந்து கொண்டு,  டெக்சாஸை சேர்ந்த தியா லதோரா என்ற பெண் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எட்சனுக்கு  வலுப்பு நோய் வரவே கீழே விழுந்தார். அதைப் பார்த்து தோழி பதறினார். உடனே, தோழி எட்சனின் வீட்டு முகவரியை போலீஸாரிடம் கூறி அவரைக் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.