தூத்துக்குடியில் அதிகாலை மர்ம பொருள் வெடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட T. சவேரியார்புரம். இப்பகுதியில் ரேஷன் கடைக்கு செல்லும் சாலையில் ஒரு குப்பை தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியினர் தினமும் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த குப்பை தொட்டியில் இருந்து பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு சென்ற பார்த்த போது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் வெடித்து நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் பொருட்களா என தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை மர்ம பொருள் வெடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது