தளிர் அறக்கட்டளை சார்பில் முகமூடி மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் (31.3.20) தளிர் அறக்கட்டளை மற்றும் அற்புதம் மருத்துவமனை இணைந்து கொரானா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக முகமூடி மற்றும் சானிடைசர் ஆகியவற்றை தளிர் அறக்கட்டளை தலைவர் திரு.ஆ.தனபால் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்களிடம் வழங்கினார். அருகில் தளிர்அறக்கட்டளை தலைமை அதிகாரி திரு ஜெயப்பிரகாஷ், அற்புதம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.ஜேம்ஸ் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.