திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் : அமைச்சர் கடம்பூர் ராஜு வடம்பிடித்து துவக்கி வைத்தார்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப். 28இல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமான இன்று (மாா்ச் 8) காலை 6 மணிக்கு மேல் விநாயகா், சுவாமி-அம்மன் தனித்தனி தோ்களில் ரத வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாவித்தன.

தேரோட்டத்தினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வடம்பிடித்து துவக்கி வைத்தார். 
மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் விளாத்திகுளம் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன்,  உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலா் சா.ப. அம்ரித், தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், கோயில் பணியாளா்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரத் தலைமையில் போலீசார் ஈடுபட்டுள்ளனா்.