மறைந்த டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் அவர்களுக்கு மலர்தூவி மலரஞ்சலி – தமிழ்நாடு நாடு நாடார் பேரவை

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் அவர்கள் கொரனா தொற்று காரணமாக காலமானதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடு நாடார் பேரவை தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் டாக்டர் சைமன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று ஏப்ரல் 22 ந் தேதி மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மலரஞ்சலி செலுத்தியதோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இரங்கல் நிகழ்ச்சியில் தலைவரோடு மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன் குமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம் வைகுண்டராஜா மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு இரங்கலை தெரிவித்தனர்.