மதக்கலவரத்தை தூண்டும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் மனு

மதக்கலவரத்தை தூண்டும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் P. சக்திவேலன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது நான் இந்து முன்னணி பேரியக்கத்தில் மாவட்ட பொதுச்செயலாளராக இருந்து என்னால் இயன்ற தேச பணிகளை செய்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 21.02.2020 அன்று சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குளத்தில் ராமேஸ்வரம் பகுதியை சார்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மதக்கலவரத்தை தூண்டும் வண்ணத்தோடு விநாயகர் கோவில் முன்பு மதமாற்றம் செய்யும் விதமாக மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து சுந்தரவேல் என்பவர் மூலம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு எண் 65/2020 மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவாளிகளை இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்ய வில்லை. எனவே மேற்படி வழக்கில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து வந்த நபர்கள் பின்புலன் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கம் சார்பாக கேட்டுக் கொள்வதோடு மேற்படி குற்றவாளிகளை தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிட்டிருந்தார் மற்றும் அவருடன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தார்கள்.