ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்கள் கருத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசு : கனிமொழி

மக்களின் கருத்தை பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருக்கிறது. அனைத்து கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் மக்களின் கருத்தை பற்றி மத்திய அரசு கவலை கொள்ளவில்லை. சுற்றுச் சூழல் பற்றியும் கவலைப்படவில்லை. இதனால் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. கண்டனத்துக்குரியது

தமிழக விவசாயிகளை பாதிக்கும் விவசாயத்தை அழிக்கும் திட்டங்களையே மத்திய அரசு கொண்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டமானது தமிழகத்துக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.