கரோனா வைரஸ் நோய் தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இக்சூழ்நிலையில் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகள் தங்கள் பகுதி தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகிப் பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
கரோனா வைரஸ் நோய் தடுப்பிற்காக, 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் போதுமானஅளவு கிடைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காய்கறி மற்றும் பழப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நலனுக்காகஅரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தூத்துக்குடியில் 9 ஆயிரத்து 775 ஹெக்டர் பரப்பில் பழங்களும், 6 ஆயிரத்து 134 ஹெக்டர் பரப்பளவில் காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது பெரும்பாலான காய்கறிகளும், பழங்களும் அறுவடைக்கு தயாராகி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இச்சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது துணை இயக்குநர் அலுவலகத்தையோஅணுகலாம்.
இதுதொடர்பாக, விவசாயிகளுக்கு வேண்டிய வழிகாட்டுதலை வழங்குமாறு மேற்கண்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகள் விற்பனையை எளிதாக்குவதற்கு, தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படும் நேரடி விற்பனை மையங்கள் மற்றும் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் வாயிலாக நடமாடும் காய்கனி விற்பனை நிலையங்களை இயக்கவும், நுகர்வோருக்கு அவர்களுக்கு அருகிலேயே நேரடியாக நியாயமான விலையில் வழங்குவதற்கும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
விவசாயிகளுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி வேண்டிய உதவிகளைப் பெறலாம். வட்டார வாரியான தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களின் தொலைபேசிஎண்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. கயத்தார் 97915 77112, 97915 77112
2. கோவில்பட்டி 97505 49687, 97514 59404
3. ஒட்டப்பிடாரம் 99765 31000, 76399 10467
4. புதூர் 97505 49687, 97505 49687
5. சாத்தான்குளம் 76395 16199, 76395 16199
6. கருங்குளம் 99526 28678, 75984 15390
7. திருவைகுண்டம் 96777 12643, 96777 12643
8. ஆழ்வார்திருநகரி 63693 89361, 63693 89361
9. தூத்துக்குடி 63742 75754, 94436 57605
10. திருச்செந்தூர் 90928 61549, 99947 10257
11. உடன்குடி 82485 66263, 97514 57064
12. விளாத்திகுளம் 96003 42052, 96003 42052
தமிழ்நாடு அரசு மற்றும் தோட்டக்கலைத்துறை மேற்கொண்டுள்ள இத்தகைய வாய்ப்பினை அனைத்து காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் வேளாண்பெருமக்கள் பயன்படுத்தி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் எவ்வித தடையுமின்றி கிடைத்திட உதவிடுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி, கேட்டுக்கொள்கிறார்.