கட்டபொம்மன் சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறியில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், வீர சக்கதேவி ஆலய ஆண்டு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும். நிகழாண்டு பொது முடக்கம் காரணமாக இந்த விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (மே 9) அரசு சாா்பில் கட்டபொம்மன் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.