மேல சாத்தான்குளம் கிறிஸ்துவின் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிரதிஷ்டையை பண்டிகையை ஒட்டி மே மாதம் 18ம் தேதி அசனப் பெருவிழா சிறப்பாக நடைபெறும்.
கொரோனா நோய் ஊரடங்கின் காரணமாக இவ்வாண்டு ஊர் அசனம் நடத்த முடியாத காரணத்தினால் ஆலய அசனக் குழுவினர் சாதி, மத பேதமின்றி அனைத்து ஏழை மக்களுக்கும் அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்க முடிவு செய்தனர்.
அதன்பேரில் 350ஏழை குடும்பங்கள், , மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றவர்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா சாத்தான்குளம் தாசில்தார் இராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, காவல் துறை உதவி ஆய்வாளர் இரகு கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலசாத்தான்குளம் சேகரகுரு.எமில்சிங், சுபலா எமில் சிங், மற்றும் உதவியாளர் பெஞ்சமின் டேனியல் ராஜ் ஆகியோர் ஆசீர்வாதம் செய்தனர்.
இதில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் அரிமா.தங்கராஜ், சுகாதார ஆய்வாளர்.கிறிஸ்டோபர் செல்வதாஸ், ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நோபுள் ராஜ், மருத்துவர் லெட்சுமி, பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, அமுதுணாக்குடி ஊராட்சித் தலைவர் முருகன், மண்டல துணை வட்டாட்சியர் அகிலா, கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், ஆனந்த், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் ஜோசப் அலெக்ஸ், அரசு ஒப்பந்ததாரர் நந்தகுமார், வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலாளர் மகா.பால்துரை, ஜோசப் ஆசீர், சேகர கமிட்டி உறுப்பினர்கள் பாஸ்கர், ஆனந்தபாபு, சாம் ராஜ், செல்வி, தேவநேசம், ஜாஸ்வா, ஜான்பிரதீப், ஜோன்ஸ், செல்வக்குமார் செல்வராஜ், வாலிபர் சங்க தலைவர் ரஜான், உள்ளிட்ட அசனக்குழுவினர் மற்றும் பலர் தன்னார்வலர்களாகக் கலந்து கொண்டனர்.
பயனாளிகளுக்கு நேர அடையாள அட்டை வழங்கப்பட்டு தனிநபர், சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. முடிவில் ஆலய பொருளாளர் பிரின்ஸ் சுந்தரராஜ் நன்றி கூறினார்.