சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய தமிழக அரசு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வில்சன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு பேரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது மக்கள் தகவல் தெரிந்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வில்சனின் தலை, மார்பு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்தது தெரியவந்தது. அத்துடன் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அப்துல் சமிம், தவ்பிக் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து தருபவருக்கு ஏழு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே தமிழக அரசால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் அளிப்பதாக அறிவித்தார். இதனிடையே இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் வில்சனின் மனைவி மற்றும் இரண்டு மகளிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கினார்.